அரசு உத்தரவுப்படி திறக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


அரசு உத்தரவுப்படி திறக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 30 March 2020 3:30 AM IST (Updated: 30 March 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

அரசு உத்தரவுப்படி திறக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்,

ஊரடங்கு உத்தரவினால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பொதுமக் கள் வீட்டிலேயே முடங்கியுள் ளனர். சாலையில் தேவையில் லாமல் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும் 2 மாவட்டங்களிலும் நக ராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அரசு போக்கு வரத்து கழக பணிமனையிலும், அங்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பஸ்களின் மீதும் தீயணைப்புத்துறையினர் கிருமி நாசினி கலந்த தண் ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் தூய்மை பணியாளர் கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் நடமாட் டத்தை குறைக்க தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று முதல் மருத்துவமனை, மருந்து கடைகள், உணவகங்கள் உள் ளிட்டவை தவிர அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய் யும் கடைகள் மற்றும் பெட் ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கின. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. மதியம் 2.30 மணிக்கு பின்னர் அந்த கடை கள் மூடப்பட்டன. இதனால் மதியத்திற்கு பிறகு பொதுமக் களின் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் 144 தடை உத்தரவு காலத்தில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்து கலெக்டர் சாந்தா வேப்பந்தட்டை, பாலையூர், நெய்குப்பை, மரவாநத்தம், வி.களத்தூர் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். மேலும் பெரம் பலூர் உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள விவசாயி களின் காய்கறி கடைகளையும், காய்கறி மார்க்கெட் வியாபாரி களின் கடைகளையும் பார்வை யிட்டு, கடைகளின் முன்பு சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு வட்டமிடப் பட்டுள்ளதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்து அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்களின் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரி களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் அரியலூரில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழக அரசின் உத்தரவை வியாபாரிகள் பின் பற்ற வேண்டும், என்றார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராம மக்களுக்கு எலுமிச்சை, இஞ்சி கலந்த டீயை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், துணைத் தலைவர் கண்ணன் மற்றும் இளைஞர்கள் வழங்கி வரு கின்றனர். மேலும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் ஊரடங்கு உத்தரவை பொது மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story