கொரோனா சிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண பொருட்கள்


கொரோனா சிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 31 March 2020 4:15 AM IST (Updated: 31 March 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

காரைக்குடி, 

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வார்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்த வார்டுக்கு காரைக்குடி வெற்றி லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை லயன்ஸ் சங்கம் சார்பில் 200 போர்வைகள், 100 முக கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவைகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் துரைசிங்கம், முன்னாள் வட்டார தலைவர் மருதப்பன், பொருளாளர் மணிகண்டன், செல்லையா, அமராவதிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, செயலர் அண்ணாமலை மற்றும் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story