கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து - கல்வித்துறை எச்சரிக்கை


கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து - கல்வித்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 April 2020 4:46 AM IST (Updated: 1 April 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் தானேயில் பல தனியார் பள்ளிகள் உடனடியாக கல்வி கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை வலியுறுத்தியதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஊரடங்கு அமலில் உள்ளபோது கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தானே மாவட்ட கல்வித்துறை அதிகாரி சங்கீதா பகவத் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசை அடுத்து ஊரடங்கால் பெற்றோர் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் உள்ள சூழலில் பள்ளிகள் கட்டணம் செலுத்த கூறுவது நியாயமற்றது. இனிமேல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால் அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பு வரை பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story