கொரோனா நிவாரண நிதியாக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் - சித்தராமையா வேண்டுகோள்


கொரோனா நிவாரண நிதியாக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் - சித்தராமையா வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 April 2020 11:45 PM GMT (Updated: 1 April 2020 11:44 PM GMT)

கொரோனாநிவாரண நிதியாககாங்கிரஸ் எம்.பி., எம்,எல்.ஏ.க்கள்அரசுக்குதலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கொரோனா தொடர்பாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனால் உழைக்கும் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து, உணவு, குடிநீர், மருந்துகளை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள். மாநில மக்கள் ஏற்கனவே வெள்ளத்தால் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு தத்தளித்தனர். அதில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இப்போது இந்த வைரஸ் தாக்குதலால் மக்கள் பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மத்திய-மாநில அரசுகள் நிலைமையை சரியான முறையில் கையாண்டு இருக்க வேண்டும். ஆனால் 2 அரசுகளும், நிவாரணம் மற்றும் உதவி பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர், நெருக்கடியில் உள்ள மக்களுக்கு ஒன்றிணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தனிப்பட்ட முறையில் அரசுக்கு தலா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்க வேண்டும். மேலும் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்.”

இவ்வாறு சித்தராமையா கூறி உள்ளார்.

Next Story