கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் தகன விவகாரத்தில் மாநகராட்சி பல்டி - பா.ஜனதா கண்டனம்


கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் தகன விவகாரத்தில் மாநகராட்சி பல்டி - பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 3 April 2020 5:06 AM IST (Updated: 3 April 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் தகன விவகாரத்தில் மாநகராட்சி திடீர் பல்டி அடித்தது. இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை, 

கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் தான் செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அடக்கம் தான் செய்ய வேண்டும் என்றால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களது குடும்பத்தினர் மும்பைக்கு வெளியில் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்லலாம் என கூறப்பட்டு இருந்தது.

இந்த முடிவுக்கு மும்பையில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவ மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் மாநில சிறுபான்மை நலத்துறை மந்திரி நவாப் மாலிக் இந்த விவகாரத்தில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மும்பை மாநகராட்சி அதன் முடிவில் இருந்து பல்டி அடித்தது.

கல்லறை தோட்டம் பெரிய அளவில் இருந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என கூறி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் தகன விவகாரத்தில் மாநகராட்சி பல்டி அடித்ததற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், ‘‘உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவுக்கு, மாநில மந்திரிகள் எதிராக உள்ளது ஏன் என ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் அவர்கள் தங்கள் மதத்தினை சற்று தள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.

Next Story