திருமங்கலம் யூனியன் பகுதியில் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை
திருமங்கலம் யூனியன் பகுதியில் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண தொகை மற்றும் உணவு பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன்கடைகள் முன்பு கை கழுவும் வசதி செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து விட்டு பொருட்கள் வாங்கினர்.
திருமங்கலம் யூனியன் தலைவர் லதா ஜெகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழழகன், கட்சி பிரமுகர்கள் அம்மாபட்டி சுகுமார், திருப்பதி, கிளைச்செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், சங்கர்கைலாசம் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story