பாப்பனூத்து ஊராட்சியில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை


பாப்பனூத்து ஊராட்சியில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 4 April 2020 3:30 AM IST (Updated: 4 April 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

பாப்பனூத்து ஊராட்சியில் சோதனைச்சாவடி அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தளி,

உடுமலை அருகே பாப்பனூத்து ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பஞ்சாயத்து நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபாப்பனூத்து, விளாமரத்துப்பட்டி, சின்னபாப்பனூத்துக்கு கிராமங்களில் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊராட்சியின் நுழைவு பகுதியில் நிர்வாகத்தின் சார்பில் தற்காலிகமாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள் ளது. அதில் சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றுவிட்டு ஊருக்குள் திரும்பும் வாகனங்களின் சக்கரங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. வெளிப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் பாப்பனூத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் வீட்டில் தங்கியிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகள் தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன் ஊராட்சியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தப்பட்டு தெருக்களில் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் ஊராட்சிமன்ற நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story