மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை 4,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - கலெக்டர் ஷில்பா தகவல் + "||" + In Tirunelveli district Corona Prevention 4,500 families isolated - Information by Collector Shilpa

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை 4,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை 4,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 4,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இது குறித்து அவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நெல்லை, 

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 36 பேர் கொரோளா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் ஆகும். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோளா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மொத்தம் 38 பேர் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்.

இது தவிர 71 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளார். சந்தேகப்படும் படியாக ஒருவர் நேற்று ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அவருக்கு ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிக்சைக்காக 1,110 படுக்கை வசதி தயார் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு பலருக்கு கொரோனா வைரஸ் தெற்று பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 4 பேர் நெல்லைக்கு வரவில்லை. அவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் 34 ஆயிரம் இருக்கிறார்கள். அந்த பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல் களக்காடு பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதனால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிரம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. பத்தமடை பகுதியில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். அந்த பகுதியில் உள்ள 4 ஆயிரம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. இதுவரை 4,500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த குடும்பங்களுக்கு நில வேம்பு கசாயம், சோப்பு ஆயில், முக கவசம் வழங்கப்பட்டு உள்ளது.

ஏதாவது காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். காய்ச்சல் இருந்தால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேரலாம். தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோன வார்டாக மாற்றுவது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது வரை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைக்கவில்லை. மத ரீதியாக இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும். அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். இது பற்றி முஸ்லிம் ஜமாத் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளேன்.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வர வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒருவர் வந்தால் போதும். அடிக்கடி வெளியே வரக்கூடாது. காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடமாடும் காய்கறி அங்காடி மூலமும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாசிய பொருட்களான எண்ணெய், சேமியா, கோதுமை, ரவா போன்ற உணவு பொருட்கள் தட்டுப்பாடு இருப்பதாக கூறினார்கள். இது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேசி இருக்கிறோம். பக்கத்து மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ வசதிக்காகவும், உறவினர் இறந்தால், உறவினர்கள் திருமணம் ஆகியவைகளுக்கு மட்டும் வெளியூர் செல்ல அனுமதி வழகப்படும்.

மற்றவர்கள் வெளியே செல்ல அனுமதி கிடையாது. கொரோன வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

முன்னதாக அவர் தலைமையில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், சுகாதாரப்பணிகளின் இணை இயக்குனர் வரதராஜன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேரன்மாதேவி அருகே, பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - கலெக்டர் ஷில்பா ஆய்வு
சேரன்மாதேவி அருகே பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.
2. உடல் நலத்தை காக்க ‘பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும்’ கலெக்டர் ஷில்பா பேச்சு
உடல்நலத்தை காக்க பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும் என்று நெல்லையில் நடந்த உலக உணவு தினவிழாவில் கலெக்டர் ஷில்பா கூறினார்.
3. விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் - கலெக்டர் ஷில்பா தகவல்
விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
4. விமானம், கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு 3,640 பேர் வந்துள்ளனர் - கலெக்டர் ஷில்பா தகவல்
விமானம், கப்பல் மூலம் இதுவரை 3,640 பேர் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
5. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.