டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டது.
செங்குன்றம்,
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மீதம் உள்ளவர்களையும் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்து, கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என சோதனை நடத்துவதற்காக, அரசு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
தற்போது அவர்களில் ஓட்டேரியில் 4 பேருக்கும், திரு.வி.க. நகரில் 4 பேருக்கும், திருவொற்றியூர், ஆலந்தூர் மற்றும் செங்குன்றம், புழல், ஆவடி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் 11 பேர் என நேற்று மட்டும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரி, ஓமந்தூரர் அரசு ஆஸ்பத்திரி, சென்னை அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர் கள் தவிர பெரவள்ளூரில் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இவர் கள் வசித்து வந்த பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டு அங்கு வெளிநபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளைச் சேர்ந்தவர் கள் வெளியே வரவும் தடை விதிக் கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story