சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு


சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு
x
தினத்தந்தி 5 April 2020 3:30 AM IST (Updated: 5 April 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்கள் 150 பேருக்கு கையுறை, முக கவசம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் நமது அம்மா பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மருது அழகுராஜ் தலைமை தாங்கி பாதுகாப்பு உபகரணங்களையும், உணவு பொட்டலங்களையும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர் வாசு, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ஜான், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story