‘மின்விளக்குகளை அணைக்காமல் அகல் விளக்குகளை ஏற்றுங்கள்’ - மராட்டிய மக்களுக்கு மந்திரி வேண்டுகோள்


‘மின்விளக்குகளை அணைக்காமல் அகல் விளக்குகளை ஏற்றுங்கள்’ - மராட்டிய மக்களுக்கு மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 April 2020 5:00 AM IST (Updated: 5 April 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

மின்விளக்குகளை அணைக்காமல் அகல் விளக்குகளை ஏற்றுமாறு மராட்டிய மக்களுக்கு மந்திரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மும்பை,

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு, வீட்டின் 4 மூலைகளிலும் அகல்விளக்குகளை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இவ்வாறு ஒரே நேரத்தில் மின்விளக்குகள் அணைக்கப்படுவதால், மின்தொகுப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று மராட்டிய அரசு அஞ்சுகிறது.

இது தொடர்பாக மராட்டிய மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் கூறியதாவது:-

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி பொதுமக்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கான மின்தொகுப்பில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

எனவே வீடுகளில் தேவையான மின் விளக்குகளை அணைக்காமலேயே அகல் விளக்குகளை ஏற்றுமாறு மராட்டிய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அந்த நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதையும், மருத்துவ பணிகளுக்கு மின் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதையும் மாநில மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story