மாவட்ட செய்திகள்

தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்கள் + "||" + Essential goods on behalf of DMK

தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்கள்

தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்கள்
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
பரமக்குடி, 

பரமக்குடி, அரியனேந்தல், போகலூர் சமத்துவபுரம், கீழக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நலிந்த குடும்பங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு போகலூர் யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய பொருளாளர் குணசேகரன், யூனியன் துணை தலைவர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன் ஆகியோர் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், கமுதி யூனியன் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட வக்கீல் அணி கதிரவன், ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி பாதாள பைரவன், காளிதாஸ், ஊராட்சி தலைவர்கள் கலையரசி பாலசுப்பிரமணியன், ரவி, பதகாவதி குமார், சாத்தாயி சாரங்கபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாடானை தாலுகாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரம், போலீஸ், உள்ளாட்சி, ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை போன்ற பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான முறையில் உணவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து திருவாடானை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திருவாடானையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். அப்போது திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலா கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாக்கோட்டை யூனியன் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சாக்கோட்டை யூனியன் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி நாளை மறுநாள் தி.மு.க. உண்ணாவிரதம்
ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசனம் மற்றும் மருதூர் மேலகால், கீழகால் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி நாளை மறுநாள் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
4. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி
தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளதாக அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா ஊரடங்கு 55-வது நாளை எட்டியது; அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்
கொரோனா ஊரடங்கு 55-வது நாளை எட்டி உள்ள நிலையில் வருமானமின்றி தவிக்கும் பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.