திருப்பத்தூர் மாவட்டத்தில், மோட்டார்சைக்கிள் மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் - கலெக்டர் தொடங்கிவைத்தார்


திருப்பத்தூர் மாவட்டத்தில், மோட்டார்சைக்கிள் மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் - கலெக்டர் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 6 April 2020 10:47 AM IST (Updated: 6 April 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் மோட்டார்சைக்கிள் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் சிவன்அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் 30 மோட்டார் சைக்கிள்களில் போலீசார் கிராமந்தோறும் சென்று பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வரவேற்றார். மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் சிவன்அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில் 30 போலீசார் மோட்டார் சைக்கிள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விளக்கி, சமூக இடைவெளி, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது குறித்து மைக்மூலம் தெரிவிப்பார்கள். இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி இணைக்கப் பட்டுள்ளதால் வாகனம் எங்கு உள்ளது என்பது மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம் என்றார். முடிவில் தனிபிரிவு இன்ஸ்பெக்டர் பழனி நன்றி கூறினார்.


Next Story