அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கு நிதிஉதவி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்


அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கு நிதிஉதவி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
x
தினத்தந்தி 7 April 2020 4:15 AM IST (Updated: 7 April 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிதி உதவி வழங்கினார்.

சிவகாசி, 

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வினர் நல உதவி வழங்கிவருகின்றனர். இந்த நிலையில் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவகாசி சிவன்கோவில், திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோவில், எம்.புதுப்பட்டி கூடுமுடையார் கோவில் ஆகியவற்றில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், கோவில் பணியாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 50 பேருக்கு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பாலராமன் ஏற்பாட்டின் பேரில் 50 பேருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர், சுகாதார அலுவலர், நகராட்சி ஊழியர் மற்றும் காவல் துறையினருக்கு ராஜவர்மன் எம்.எல்.ஏ. இலவச முககவசம் வழங்கினார். சாத்தூரில் உள்ள 24 வார்டுகளுக்கும் கிருமி நாசினி மருந்து வழங்கினார். பின்னர் சாத்தூர் ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் இலவச முககவசம் வழங்கினார். மேலும் அவர் தனது சொந்த செலவில் ஆதரவற்றோர்களுக்கு தினந்தோறும் அம்மா உணவகத்தில் இருந்து 3 வேளை உணவு பொட்டலம் வழங்கி வருகிறார்.

முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் மாநில பேரவை துணைச் செயலாளர் சேதுராமானுஜம், நகர செயலாளர் வாசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் இளங்கோவன், கிருஷ்ணன், அந்தோணி, ஹரிபால், அசோக் மற்றும் சாத்தூர் நகராட்சி ஆணையர் ராஜ மாணிக்கம், பொறியாளர் முத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. 20 ஒன்றிய கவுன்சிலர்களிடம் தலா 5 ஆயிரம் முக கவசங்கள் வழங்கினார். யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் கணேசன், துணை தலைவர் ராம்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், வேல்முருகன், யூனியன் ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சத்திரப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜவர்மன் 5 ஆயிரம் முக கவசங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கந்தகிருஷ்ணகுமார், மாடசாமி, மணிமுத்து, அ.தி.மு.க.ஒன்றிய பொருளாளர் சுப்பையா, ஒன்றிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகபூபதி, ஒன்றிய அவைத்தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைபணியாளர்களுக்கு உடல் கவசம், கையுறை, முககவசம், கை கழுவ சோப்பு போன்றவற்றை சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் முககவசங்களை தனது சொந்த செலவில் வழங்கி ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நில வள வங்கி தலைவர் முத்தையா, ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் ரமேஷ் மருது பாண்டியன், மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் பழனிகுரு, பிரமநாயகம், சரவணன், எக்ஸ்னோரா சந்திரன், தைலாகுளம் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story