காணொலி காட்சி மூலம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருடன் முதல்-அமைச்சர் ஆலோசனை


காணொலி காட்சி மூலம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
x
தினத்தந்தி 7 April 2020 10:45 PM GMT (Updated: 7 April 2020 9:26 PM GMT)

காணொலி காட்சி மூலம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருடன் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படியும் கலெக்டருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Next Story