திருபுவனை அருகே, கிராமப்புற சாலை வழியாக புதுவைக்கு வரும் வாகனங்கள்


திருபுவனை அருகே, கிராமப்புற சாலை வழியாக புதுவைக்கு வரும் வாகனங்கள்
x
தினத்தந்தி 8 April 2020 3:04 PM IST (Updated: 8 April 2020 3:04 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புற சாலை வழியாக புதுவைக்குள் வாகனங்கள் நுழைகின்றன. இதை தடுக்க முள்வேலி அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

திருபுவனை, 

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழகம், புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளும் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

திருபுவனை அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளி நேலியனூர்-கடலூர் சாலை புதுச்சேரி எல்லை மற்றும் கிராமப்புற சாலையாக உள்ளது. இந்த சாலையில் தற்போது சிலர் தங்களது வாகனங்களில் ஊர் சுற்றி வருகிறார்கள். தடையை மீறி சிலர் மது பாட்டில்கள் கடத்துவது, மீன், இறைச்சி எடுத்துச் செல்வது என சென்று வருகிறார்கள்.

மேலும் இந்த பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாக்கம்-கூட்டுரோடு வழியாக கடலூருக்கு அதிகப்படியாக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதை தடுக்க திருபுவனை போலீசார் முள்வேலி அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதி வழியாக பொதுமக்கள் செல்வது அபாயகரமானதாகும். இதனால் அவர்களை தடுக்கும் போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும் கிராமப்புற தெருக்கள் வழியாக புகுந்து வரும் வாகனங்கள், பொதுமக்களை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லுமாறு போலீசார் வலியுறுத்தி வருகிறார்கள்.

Next Story