மாவட்ட செய்திகள்

நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Thoothukudi port employee commits suicide by hanging

நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி, 

தூத்துக்குடி பெரியசெல்வம்நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 59). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சிராணி. கடந்த 3-ந்தேதி அதிகாலையில் ஜான்சிராணி, வீட்டில் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டதாக தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜான்சிராணி நகையை மறைத்து வைத்து விட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சிராணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் இருந்து 93 பவுன் நகையையும் மீட்டனர்.

இதனால் வின்சென்ட் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். நேற்று காலையில் வின்சென்ட் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வின்சென்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
தூத்துக்குடி அருகே, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
2. தூத்துக்குடியில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
3. தூத்துக்குடியில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு 190 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்
தூத்துக்குடியில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு 190 தொழிலாளர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
4. தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2-ம் ஆண்டு நினைவு தினம்: பலியானவர்கள் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பலியானவர்களுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
5. தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.