நிவாரண பொருட்கள் மீது பா.ஜனதாவினர் ஸ்டிக்கர் ஒட்டுவது தலைகுனிவு - குமாரசாமி கண்டனம்
நிவாரண பொருட்கள் மீது பா.ஜனதாவினர் ஸ்டிக்கர் ஒட்டுவது தலைகுனிவு என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று இந்த உலகமே யோசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த சில தலைவர்கள் அரசின் நிவாரண பொருட்கள் மீது தங்களின் பட ஸ்டிக்கர் ஒட்டி வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.
இது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல். இது சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளா? அல்லது பா.ஜனதா வழங்கும் உதவிகளா?. இது மிக தரம் தாழ்ந்த அரசியல். இதற்கு பிரதமர் மோடியும், முதல்-மந்திரி எடியூரப்பாவும் பதில் கூறுவார்களா?. ஒரு மதத்தினரை கொரோனா வைரசுடன் ஒப்பிட்டு வெளிவரும் விமர்சனங்களுக்கு பிரதமர் இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. நிவாரண பொருட்கள் மீது பா.ஜனதா தலைவர்களின் பட ஸ்டிக்கர் ஒட்டப்படுவதற்கு பிரதமர் சம்மதித்து உள்ளாரா?.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story