தூத்துக்குடியில் ஊரடங்கால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன: செடியிலே கருகும் கேந்தி பூக்கள் - விவசாயிகள் வேதனை


தூத்துக்குடியில் ஊரடங்கால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன: செடியிலே கருகும் கேந்தி பூக்கள் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 12 April 2020 3:45 AM IST (Updated: 12 April 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கால் பூ மார்க்கெட்டுகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் கேந்தி பூக்களை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாததால், அவை செடியிலேயே கருகும் நிலை உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. 

மேலும் பூ மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கேந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு உள்ள விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு உள்ளனர். இதனால் பூக்கள் செடிகளிலேயே கருகும் நிலை உள்ளது.

விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கேந்திப்பூ உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது பூ மார்க்கெட் எதுவும் செயல்படாததால், தோட்டத்தில் பூக்களை பறிக்காமல் விட்டு உள்ளனர். இதனால் பூக்கள் செடியிலேயே காய்ந்து கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story