பார்த்திபனூரில் தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை
பார்த்திபனூர் அ.தி.மு.க. நகர் செயலாளர் வினோத் தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து கால்களை கழுவி பாதபூஜை செய்து வணங்கினார்.
பரமக்குடி,
பரமக்குடி யூனியன் மேலப்பார்த்திபனூர் ஊராட்சியில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார பணியில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். இதில் பார்த்திபனூர் அ.தி.மு.க. நகர் செயலாளர் வினோத் தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து கால்களை கழுவி பாதபூஜை செய்து வணங்கினார். பின்பு அவரது ஏற்பாட்டில் 50 தூய்மை பணியாளர்களுக்கு நிதிஉதவி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சண்முகவேல், துணை தலைவர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் நிதிஉதவி வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவி, நகர் அவை தலைவர் மாணிக்கம், அண்ணா தொழிற்சங்க தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சரவணன், ஐ.டி.பிரிவு மாவட்ட துணை செயலாளர் அம்மா சரவணன், ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் சிவநேசன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story