ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்: ரெயின்போ நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து


ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்: ரெயின்போ நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 13 April 2020 3:19 PM IST (Updated: 13 April 2020 3:19 PM IST)
t-max-icont-min-icon

ரெயின்போ நகர் பகுதியில் போலீசார் இரவு ரோந்து சென்று ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் புதுவையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பால் பூத்துகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் திறந்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என புதுவை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகிறார்கள். அதன்படி புதுவை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் ரெயின்போ நகர் பகுதியில் இரவு ரோந்து சென்றனர். அப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

Next Story