புதுச்சேரியில் ஏப்.30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


புதுச்சேரியில் ஏப்.30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 13 April 2020 7:13 PM IST (Updated: 13 April 2020 7:13 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ்  பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அறிவித்த தேசிய ஊரடங்கு  நாளையுடன்  முடிவுக்கு வர உள்ளது. நாளை காலை  10 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில்  உரையாற்றும் பிரதமர் மோடி, ஊரடங்கு தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு மத்தியில், தமிழகம், தெலுங்கான, ஒடிசா,பஞ்சாப் உள்பட 7 மாநிலங்கள் ஊரடங்கை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக  அறிவித்துள்ளன.  இந்த நிலையில்,  புதுச்சேரியிலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Next Story