கொரோனா தொற்று அதிகரிப்பு: 90 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீடு, வீடாக பரிசோதனை
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து 90 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. குமரானந்தபுரம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், டாக்டர்கள் 50 பேர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம்.
கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் நேற்று மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து செவிலியர்கள், டாக்டர்கள் என 90 பேர் கொண்ட குழுவினர் குமரானந்தபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். காய்ச்சல், சளி பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? என்று சோதனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story