மூலைக்கரைப்பட்டி அருகே, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட தாயின் கை துண்டிப்பு - கார் டிரைவர் கைது


மூலைக்கரைப்பட்டி அருகே, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தட்டிக்கேட்ட தாயின் கை துண்டிப்பு - கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 April 2020 4:30 AM IST (Updated: 15 April 2020 12:37 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட தாயின் கை அரிவாளால் துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இட்டமொழி, 

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழசிந்தாமணியை சேர்ந்தவர் லூர்துமணி (வயது 60), கார் டிரைவர். இவர் 15 வயதுடைய ஒரு சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், செல்போனிலும் பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அந்த சிறுமி, தனது தாயிடம் கூறி உள்ளார். உடனே, அந்த சிறுமியின் தாய், லூர்துமணியிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லூர்துமணி, அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவருடைய தாயை அரிவாளால் வெட்டினார். இதில் அவருடைய கை துண்டானது. தடுக்க சென்ற சிறுமிக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் காயம் அடைந்த தாயும், மகளும் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து லூர்துமணியை கைது செய்தனர்.

Next Story