மதுபான கடைகளில் கலால் துறையினர் ஆய்வு


மதுபான கடைகளில் கலால் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 15 April 2020 1:47 PM IST (Updated: 15 April 2020 1:47 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளில் உள்ள இருப்பு குறித்து கலால்துறையினர் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுமக்கள் ஒரே இடத்தில் திரளக் கூடாது என்பதற்காக சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டன. மது பான பார்கள், கள், சாராயக்கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த கடைகளில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் எடுத்து வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க கலால் துறை துணை ஆணையர் தயாளன் மேற்பார்வையில் 3 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள குழுவினர் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் மதுபானங்கள் வழங்கிய கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவையில் உள்ள மொத்த மதுபான விற்பனை குடோன்கள், பார்கள், சில்லரை மதுபான கடைகளில் உள்ள இருப்பு விவரங்களை சரிபார்க்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கலால் துறை துணை ஆணையர் தயாளன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேற்று மதுபான கடைகளை திறந்து இருப்பு விவரங்களை சேகரித்தனர்.

மதுக்கடைகள் திறந்து அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் மது பாட்டில் கிடைக்குமா? என்று மது பிரியர்கள் கடைகளை சுற்றி சுற்றி வந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து துரத்தினர்.

Next Story