காரிமங்கலத்தில் 4 கடைகள் தீயில் எரிந்து நாசம்
காரிமங்கலத்தில் 4 கடைகள் தீயில் எரிந்து நாசமானது.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெருமாள் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடை உள்ளது. இதன் அருகே முருகன் என்பவர் சலூன் கடையும், ரமேஷ் என்பவர் ஓட்டல் கடையும், ராணி என்பவர் தள்ளுவண்டியில் பழக்கடையும் வைத்து நடத்தி வந்தனர். இந்த 4 கடைகளும் அடுத்தடுத்து செயல்பட்டு வந்தன. நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் ஒரு கடையில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இந்த தீ மளமளவென பிடித்து அருகில் உள்ள மற்ற 3 கடைகளிலும் பிடித்து கொண்டது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தீவிபத்தில் 4 கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் 4 கடைகளிலும் இருந்த காய்கறிகள், பழங்கள், மரச்சாமான்கள், சலூன் கடை, தள்ளுவண்டி என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story