திசையன்விளை மார்க்கெட்டில் கருவாடு விலை ‘கிடுகிடு’ உயர்வு


திசையன்விளை மார்க்கெட்டில் கருவாடு விலை ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 18 April 2020 3:45 AM IST (Updated: 18 April 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை மார்க்கெட்டில் கருவாடு விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது.

திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் கருவாடு மார்க்கெட் உள்ளது. இங்கு அனைத்து ரக கருவாடுகளும் கிடைக்கும். சென்னை மற்றும் வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் வசிக்கும் இப்பகுதி மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்துசெல்லும்போது இங்கு வந்து கருவாடுகளை அதிக அளவில் வாங்கி செல்வார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த 21 நாட்களாக நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதியில் இருந்து தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இதனால் கருவாடுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விலை ‘கிடுகிடு’ உயர்வு

இதன் காரணமாக கருவாடு விலை ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது. தற்போது சில ரக கருவாடுகள் மட்டுமே குறைந்த அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்று திசையன்விளை மார்க்கெட்டுக்கு சாளை மற்றும் முரல், நெத்திலி ரக கருவாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. 

முன்பு 100 எண்ணம் ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்ட சாளை கருவாடு நேற்று ரூ.300 முதல் 350 வரை விற்பனை செய்யப்பட்டது. 100 எண்ணம் ரூ.200 வரை விற்பனையான முரல் கருவாடு நேற்று ரூ.400 வரையும், ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையான நெத்திலி கருவாடு நேற்று ரூ.400 வரையும் விற்பனை ஆனது. 

கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டாலும் அதனை பொருட்படுத்தால் நேற்று ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வந்து கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Next Story