திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 17 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட 4 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 2 பேரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
தீவிர சிகிச்சை
வலங்கைமானை அடுத்த கொட்டையூரை சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தார். இதையடுத்து அவருடைய மனைவிக்கும், 2 மகன்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதேபோல திருத்துறைப்பூண்டி நெடும்பலம் பகுதியை சேர்ந்த ஒருவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தார். இவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதாவது டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த இருவருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்று உறுதியான 4 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story