அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் அதிகாரிகள் தகவல்


அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 18 April 2020 11:10 AM IST (Updated: 18 April 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர், 

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உதவி தேவைப்பட்டால்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசின் வழிகாட்டுதலினை பின்பற்றி விவசாயிகள் விவசாய பணிகளை தொடர்ந்து செய்ய வேளாண்மை துறைக்கு ஊரடங்கிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி செல்ல வேளாண்மை துறை அதிகாரிகளால் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்பந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண்மை உதவி அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் போன்ற அதிகாரிகளை செல்போன் மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். வட்டாரம் வாரியாக வேளாண்மை உதவி இயக்குனர்களின் செல்போன் எண்கள் வருமாறு:-

தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

வேளாண்மை உதவி இயக்குனர்கள் 9443590920 (பெரம்பலூர்), 9789142145 (ஆலத்தூர்), 8825631615 (வேப்பூர்), 8012849600 (வேப்பந்தட்டை).

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளாண் பணிகளில் தொழில்நுட்ப சந்தேகம், உரத்தேவை மற்றும் இதர ஐய்யப்பாடுகளை களைய பின்வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை செல்போனில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். அவர்களின் செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-

வேளாண்மை உதவி இயக்குனர்கள் 9751245574 (அரியலூர்), 9884632588 (செந்துறை), 8072890022 (திருமானூர்), 9750890874 (ஜெயங்கொண்டம்), 9443092411 (ஆண்டிமடம்- தா.பழூர்).

மேற்கண்ட தகவல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள் கணேசன் (பெரம்பலூர்), கிருஷ்ணமூர்த்தி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story