மதுபானம் கிடைக்காததால் விரக்தி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஊரடங்கு உத்தரவால் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மூலக்குளம்,
புதுவை முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 36), தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2-வது மனைவி தனியாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நமச்சிவாயம் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.
தற்போது ஊரடங்கு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மது கிடைக்காததால் நமச்சிவாயம் விரக்தியில் இருந்துவந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நமச்சிவாயத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story