ஜெயங்கொண்டத்தில் சர்க்கஸ் பணியாளர்களுக்கு நிவாரணம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சர்க்கஸ் குழுவினர் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சர்க்கஸ் காட்சியை தொடங்கினர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சர்க்கஸ் குழுவினர் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சர்க்கஸ் காட்சியை தொடங்கினர். சர்க்கஸ் காட்சி தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. தற்போது தடை உத்தரவு நீடித்து வரும் நிலையில் சர்க்கஸ் நடைபெறவில்லை. இதனால் சர்க்கஸ் குழுவில் பணியாற்றும் 25 பெண்கள் உள்பட 71 பேர் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அரியலூர் மாவட்ட நீதிபதிகள் அனைவரும் இணைந்து சர்க்கஸ் குழுவில் பணி புரியும் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளை நிவாரண உதவியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்கினர். உணவுப்பொருட்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி அல்லி வழங்கினார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்த பலரும் பாதிக்கப்பட்டு உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். தன்னார்வலர்கள் நகரை மட்டுமே பார்த்து வருகின்றனர். அவ்வாறு நகரை மட்டுமே பார்க்காமல் கிராமந்தோறும் சென்று கிராமங்களில் உள்ள கூலி தொழிலாளிகளுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்களை வழங்கி உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story