கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 April 2020 3:45 AM IST (Updated: 19 April 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வினியோகத்தை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்நது. எனவே கட்டுமான பணியாளர்கள்,ஓட்டுநர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் மற்றும் 15 கிலோ அரிசி, ஒருகிலோ துவரம் பருப்பு, ஒருலிட்டர் பாமாயில் எண்ணெய் அடங்கிய பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 33 ஆயிரத்து 751 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி நிவாரண பொருட்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா,மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் தமிழ்ச்செல்வி,வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story