சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் கைது 600 லிட்டர் ஊறல், 110 லிட்டர் சாராயம் கைப்பற்றி அழிப்பு


சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் கைது 600 லிட்டர் ஊறல், 110 லிட்டர் சாராயம் கைப்பற்றி அழிப்பு
x
தினத்தந்தி 20 April 2020 5:00 AM IST (Updated: 20 April 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே சாராயம் காய்ச்சிய அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 லிட்டர் ஊறல், 110 லிட்டர் சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது

தஞ்சையை அடுத்த வல்லம்புதூர் அருகே காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தஞ்சை மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் வல்லம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயசீலன்(மதுவிலக்கு பிரிவு), சீதாராமன்(வல்லம்), மதுவிலக்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு, வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏட்டுகள், போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய வல்லம்புதூரை சேர்ந்த ராசு என்ற ராஜேந்திரன்(வயது 40), செல்வேந்திரன்(31), பாலகுமார்(30), சரத்குமார்(22), ராஜா(25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராஜேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

சாராயம்-ஊறல் அழிப்பு

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அங்கு 3 பேரல்களில் குழி தோண்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 600 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்டவை அந்த பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீருக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story