‘ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவம் தான்’ கொரோனா பீதிக்கு இடையே இறைச்சி கடைக்கு படையெடுத்த மக்கள்

‘ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவம் தான்’ கொரோனா பீதிக்கு இடையே இறைச்சி கடைக்கு படையெடுத்த மக்கள்
x
தினத்தந்தி 20 April 2020 7:01 AM IST (Updated: 20 April 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகர்கோவிலில் இறைச்சி கடைக்கு மக்கள் படையெடுத்தனர். கொரோனா அச்சத்திற்கு இடையேயும் தங்களுடைய ஆசையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

நாகர்கோவில், 

ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகர்கோவிலில் இறைச்சி கடைக்கு மக்கள் படையெடுத்தனர். கொரோனா அச்சத்திற்கு இடையேயும் தங்களுடைய ஆசையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

மக்கள் கூட்டம்

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு தான் சமைக்கப்படும். எக்காரணத்துக்காகவும் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவ உணவை குமரி மாவட்ட மக்கள் கைவிட மாட்டார்கள். அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆடு, கோழி மற்றும் மாட்டு இறைச்சி வாங்குவதற்காக இறைச்சி கடைக்கு மக்கள் படையெடுத்தனர்.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வடசேரி, ஒழுகினசேரி, இடலாக்குடி, இளங்கடை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இறைச்சி கடைகளில் கூட்டத்தை பார்த்த போது நாகர்கோவிலில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதோ? என்று எண்ணத் தோன்றியது.

நீண்ட வரிசை...

எனினும் அனைத்து கடைகளிலும் மக்கள் அரசின் உத்தரவுப்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கிச் சென்றனர். மக்கள் கூட்டத்தையொட்டி இறைச்சி கடைகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டமாக வந்தவர்களை வரிசையில் நின்று இறைச்சி வாங்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story