தொழிலாளர்கள் முககவசம் அணிவது கட்டாயம் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
தொழிலாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் பர வலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு குறித்து லாஸ் பேட்டை போலீசார் இடையஞ்சாவடியை சேர்ந்த தொழிலாளர்களுடன் ஆலோ சனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு போலீஸ் சூப்பி ரண்டு சுபம் சுந்தர் கோஷ் தலைமை தாங்கினார். இன்ஸ் பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, ஜாகீர் உசேன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர்கோஷ் பேசுகையில், ‘ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் தொழிலாளிகள் பாதிக்கப் பட்டு உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்படுகிறது. வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண் டும். மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். முக கவசம் அணிய தவறினால் அபராதம் வசூலிக் கப்படும்’ என்றார். கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரி கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் சமூக இடை வெளியை கடைபிடித்து நின்றனர்.
இதேபோல் அரியாங்குப்பம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கிருமாம்பாக் கம், பாகூர் பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் நிர்வாகி கள், இன்ஸ்பெக்டர் அனில் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்ட ராமன், பணிக்கு ஊழியர்களை அழைத்து வரும் வாகனங்களில் மருந்து தெளிக்க வேண்டும். ஷிப்ட் இடைவெளி ஒரு மணி நேரம் கடைபிடித்து பாது காப்பு கவசத்துடன் தொழி லாளர்கள் பணியில் இருக்க வேண்டும். போலீஸ் அதிகாரி கள் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story