திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் 114 பேருக்கு நவீன கருவி மூலம் பரிசோதனை - ரெயில்வே ஐ.ஜி. வனிதா தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் 114 பேருக்கு நவீன கருவி மூலம் (ரேபிட் டெஸ்ட் கிட்) பரிசோதனை செய்யப்படும் என்று ரெயில்வே ஐ.ஜி. வனிதா கூறினார்.
திருப்பத்தூர்,
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கு கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட கண் காணிப்பு அலுவலர் களாக மாநில ஆவண காப்பக ஆணையர் மங்கத்ராம் சர்மா, ரெயில்வே ஐ.ஜி. வனிதா ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்கள் இந்த மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூரில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை சார்பில் அமைக் கப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் திருப்பத்தூர் எல்லைகளில் பல்வேறு இடங்களில் அமைக் கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை ஐ.ஜி. வனிதா நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக் கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப் பாட்டு அறையை பார்வை யிட்டார். பின்னர் கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் ஆகியோரிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிகைக்காக அமைக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேன். காவல்துறை சார்பில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் பணிபுரியும் 114 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) நவீன கருவி மூலம் (ரேபிட் டெஸ்ட் கிட்) கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக் கையில் திருப்பத்தூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்..
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், பாலகிருஷ்ணன், சச்சிதானந்தம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆம்பூர் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி. வனிதா ஆய்வு செய்து அங்கு பணியில் உள்ள அரசு அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது கலெக்டர் சிவன்அருள், நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்ட நாளில் இருந்து தடையை மீறி வெளியில் நடமாடியவர்கள் மீது இதுவரை 5,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறி முதல் செய்யப்பட்ட வாகனங் களை விடுவிக்க உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விடுவிக்கப்படுவது குறித்து ஒரு நாளைக்கு முன்னதாகவே உரியவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஒரு நாளைக்கு 15 முதல் 20 வாகனங்கள் மட்டுமே விடுவிக்கப்படும். உரிய ஆவனங்கள் சமர்ப் பிக்காவிட்டால் வாகனங்கள் விடுவிக்கப்பட மாட்டாது என்றார்.
முன்னதாக வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐ.ஜி. வனிதா ஆய்வு செய்தார். மேலும் கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதை த்தொடர்ந்து வாணியம் பாடி நகராட்சியில் அமை க்கப்பட்டிருக்கும் கட்டுப் பாட்டு அறையை பார் வையிட்டனர். பின்னர் வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜீவா நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியில் இருந்த காவல்துறையினரிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து விசாரித்தார்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் காயத்திரி சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story