தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவில் உறுதியானது


தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவில் உறுதியானது
x
தினத்தந்தி 21 April 2020 5:00 AM IST (Updated: 21 April 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

பி.துறிஞ்சிப்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் உறுதியானது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 26-ந்தேதி வந்து சென்ற சேலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு உள்ளானது அண்மையில் உறுதியானது. இதையடுத்து அவர் வந்து சென்ற வீட்டில் வசிக்கும் அவருடைய உறவினர்கள் 5 பேரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தினார்கள். அவர்களுடைய ரத்த மாதிரிகள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவில் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அந்த 5 பேரும் தொடர்ந்து வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story