தொழிலாளர்களுக்கு அரிசி - மளிகை பொருட்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


தொழிலாளர்களுக்கு அரிசி - மளிகை பொருட்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 21 April 2020 5:30 AM IST (Updated: 21 April 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்கள் 275 பேருக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, ரூ.1,000 ஆகியவற்றை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், ஈமக்கிரியை செய்யும் தொழிலாளர்கள் என 275 பேருக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, ரூ.1,000 ஆகியவற்றை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இதேபோல் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள புஷ்பவனம், பெரிய குத்தகை, கத்தரிப்புலம், கரியாப்பட்டினம், கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட 36 ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு 5 கிலோ அரிசி, 4 கிலோ காய்கறி, ரூ.300 மதிப்புள்ள மளிகை பொருட்கள், ரூ.1,000 ஆகியவற்றை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், மாவட்ட கவுன்சிலர்கள் திலீபன், சுப்பையன், வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் கமலாஅன்பழகன், துணைத்லைவர் அறிவழகன், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வெற்றிவேல், ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story