மே மாதம் 3-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவிப்பு
மே மாதம் 3-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஊரடங்கு உத்தரவில் எந்தவித தளர்வும் இல்லை என்றும், ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கவும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
144 தடை உத்தரவு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதுவரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மே மாதம் 3-ந் தேதிக்கு பிறகு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story