நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் போலீஸ் ஏட்டுக்கு கத்திக்குத்து; கஞ்சா வியாபாரி கைது 2 பேர் தப்பி ஓட்டம்
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் போலீஸ் ஏட்டுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் போலீஸ் ஏட்டுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனிப்படை போலீசார்
நாகர்கோவில் நகர பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார் நாகர்கோவில் நகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே தனிப்படை போலீஸ் ஏட்டு வீரமணி, விஜயகுமார், சிவாஜி ஆகியோர் கொண்ட தனிப்படை ஆசாரிபள்ளம் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த அஜித் (வயது 29) மற்றும் அவருடைய நண்பர்கள் உள்பட 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
கஞ்சா வியாபாரி கைது
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக் கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அஜித், அவருடைய நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ் ஏட்டு வீரமணியை குத்தினர். படுகாயமடைந்த வீரமணியை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே அஜித் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவருடைய நண்பர்கள் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அஜித்தை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அஜித் பிரபல கஞ்சா வியாபாரி என்பதும் கோட்டார், ஆசாரிபள்ளம், வடசேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு கள் இருப்பதும் தெரியவந்தது. தப்பியோடிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசாரிபள்ளம் பகுதியில் போலீசாரை கஞ்சா கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story