கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நெல் விதைகள் கிடைக்க ஏற்பாடு மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக நெல் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக நெல் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல் விதைகள்
கொரோனா வைரஸ் காரணமாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள போதிலும் வேளாண்மை பணிகள் அத்தியாவசிய பணிகளாக கருதப்பட்டு உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னோடி திட்டமான கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேளாண் கருவிகள் மூலமாக உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பற்றிய விழிப்புணர்வுடன் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அறுவடை செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமும், தேவையான இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமும் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கன்னிப்பூ பருவத்துக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் இடு பொருட்கள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நெல் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உரங்கள்
தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி தொடக்க கூட்டுறவு மையங்கள், தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளின் தேவைக்காக அனைத்து வகையான ரசாயன உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்மந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங் கள், வேளாண்மை உதவி அலுவலர் (அல்லது) வேளாண்மை அலுவலர் (அல்லது) வேளாண்மை உதவி இயக்குனர் போன்ற அதிகாரிகளை செல்போன் மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான அதிகாரிகளின் செல்போன் எண்கள் வருமாறு:-
செல்போன் எண்கள்
சத்தியஜோஸ் (வேளாண்மை இணை இயக் குனர்)- 99655 68051, முருகேசன் (வேளாண்மை துணை இயக்குனர்)- 98659 76963, குணபாலன் (கலெக்டரின் நேர்முக உதவியாளர், விவசாயம்)- 97510 25460, மனோரஞ்சிதம் (வேளாண்மை உதவி இயக்குனர், தரக்கட்டுபாடு)- 88259 70612 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதே போல வேளாண்மை உதவி இயக்குனர்களின் செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-
சாம் (அகஸ்தீஸ்வரம்)- 97916 68670, கீதா (ராஜாக்கமங்கலம்)- 94421 36046, ஜோஸ் (தோவாளை)- 94432 83954, விமலா (குருந்தன்கோடு, தக்கலை)- 94425 21636, சுந்தர் டேனியல்பாலஸ் (திருவட்டார், மேல்புறம்)- 94431 10239, ஜென்கின் பிரபாகர் (கிள்ளியூர், முன்சிறை)94432 85842 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story