கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்களில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அடுக்கம்பாறை,
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொரோனா அறிகுறியுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 350 படுக்கைகள் உள்ளன. அந்த வார்டில் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். அங்கு, 3 மாவட்டங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
அங்கு, வீட்டில் இருப்பதைப்போல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. டி.வி., வை பை, செல்போன் உள்ளிட்ட வசதிகள் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவர்கள் மூலம் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கொரோனா தோற்று குறித்து ரத்த பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கொரோனா தொற்று சம்பந்தமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, வேலூர் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 75 பேரில், 20 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ், மருத்துவக் கல்லூரி டீன் செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story