கரூர்-லாலாபேட்டை பகுதிகளில் ஹெலி கேமரா மூலம் பொதுமக்கள் கண்காணிப்பு


கரூர்-லாலாபேட்டை பகுதிகளில் ஹெலி கேமரா மூலம் பொதுமக்கள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 22 April 2020 9:13 AM IST (Updated: 22 April 2020 9:13 AM IST)
t-max-icont-min-icon

கரூர்-லாலாபேட்டை பகுதியில் ஹெலி கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கின்றனர்.

கரூர்,

கரூர்-லாலாபேட்டை பகுதியில் ஹெலி கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையில், கரூர் நகர் பகுதிக்குட்பட்ட சுங்ககேட், திருமாநிலையூர், லைட்ஹவுஸ், பசுபதிபாளையம், பஸ் நிலையம், ரவுண்டானா, வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர்.

இவர்களுக்கு உறுதுணையாக ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்களும் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று முதல் கரூர் திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் பறக்கும் ஹெலி கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் அதனை மீறி யாரேனும் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அவர்களை பிடித்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் ஊராட்சி பகுதிகளில் தேவையின்றி சாலையில் யாரேனும் பொதுமக்கள் சுற்று கிறார்களா? என குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா, ஹெலி கேமரா மூலம் கண்காணித்தார்.

அப்போது சில மாணவர்கள் சாலைப்பகுதி யில் விளையாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story