தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை கலெக்டர் கோவிந்தராவ் தகவல்


தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
x
தினத்தந்தி 23 April 2020 4:35 AM IST (Updated: 23 April 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 6¾ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பு பணி

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகள் ஒருங்கிணைந்து 17,749 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8,173 நபர்கள், வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 909 நபர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரும்பிய 438 நபர்கள் என மொத்தம் 9,520 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 8,173 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிந்து, இவர்களுடன் சேர்த்து மீதமுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

6¾ லட்சம் பேருக்கு பரிசோதனை

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 54 பேரில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 54 நபர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 1,63,368 வீடுகளை சேர்ந்த 6,93,447 நபர்களுக்கு இதுவரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி குறித்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story