பள்ளிகொண்டா சார்பதிவாளர் அலுவலகத்தில், ஆம்பூர் பகுதி பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய எதிர்ப்பு - ஊழியர்கள் பணிக்கு வரவில்லை
பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவ லகத்தில் ஆம்பூர் பகுதி பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
அணைக்கட்டு,
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. 20-ந் தேதியில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளது. முக்கிய அலுவலகங்கள் செயல் படலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சாவடித்தெருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு, பத்திரப் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அங்கு, கூடுதலாக ஆம்பூர் சார்பதிவு அலுவலகமும் நடக்கும் என அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பள்ளிகொண்டா பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பள்ளி கொண்டா சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் கடந்த 3 நாட்களில் ஆம்பூரைச் சேர்ந்த 6 பேர் மட்டுமே பத்திரப் பதிவு செய்துள் ளனர்.
இதுகுறித்து பள்ளி கொண்டா பத்திர எழுத்தர் களிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்றால் ஆம்பூர் பகுதி தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. பள்ளிகொண்டாவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும் என்றும், அந்தப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
அதற்கு பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பத்திர எழுத்தர்களும் எதிர்பு தெரிவித்து, அலுவலகத்துக்கு யாரும் வரவில்லை. மவுன போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்கள் பகுதியில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஆம்பூர் பகுதி மக்கள் பள்ளிகொண்டா சார்பதிவாளர் அலுவலகத் துக்கு பத்திரப் பதிவு செய்வதற்கு ஒருநாள் ஆகி விடுகிறது.
அங்குச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித் துள்ளனர். சார் பதிவாளர் அலுவலகம் உள்ள தெருவில் 100-கும் மேற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்பட பல அலுவலகங்கள் உள்ளன.
எனவே பள்ளிகொண்டா சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆம்பூர் பகுதி பொதுமக்கள் பத்திரப் பதிவு செய்வதை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story