முதியோர்களை கவனிப்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி சீட்டு மே 3-ந்தேதி வரை நீட்டிப்பு - மாநகராட்சி அறிவிப்பு


முதியோர்களை கவனிப்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி சீட்டு மே 3-ந்தேதி வரை நீட்டிப்பு - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 April 2020 4:30 AM IST (Updated: 24 April 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

முதியோர்களை கவனிப்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி சீட்டு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை, 

சொந்த ஊரை விட்டு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருப்போர், சொந்த ஊரில் தங்களது வீட்டில் உள்ள முதியோர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்வதற்காக, ஒருவரை வேலைக்கு வைத்திருப்பர். வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தினமும் பராமரித்து, தேவையான உணவுகளை சமைத்து வைத்துவிட்டு அவர்கள் செல்வர்.

அவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு போக்குவரத்து அனுமதி சீட்டு ஏற்கனவே ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை வழங்கப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கவனித்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி சீட்டு தானாகவே மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story