கள்ளக்குறிச்சி, அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. சார்பில் இலவச உணவு


கள்ளக்குறிச்சி, அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. சார்பில் இலவச உணவு
x
தினத்தந்தி 24 April 2020 3:45 AM IST (Updated: 24 April 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றவர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றவர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து உள்ளார். இதன்படி அம்மா உணவகத்தில் தினமும் காலையில் 700 பேருக்கும், மதியம் 700 பேருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. 

இதனை குமரகுரு எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்து, காலை உணவு வழங்கினார். அப்போது நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, மாவட்ட கழக அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, அம்மா பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் ஞானவேல், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேப்போல் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள், பெயிண்டர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு குமரகுரு எம்.எல்.ஏ. அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

அப்போது அ.தி.மு.க. நகர செயலாளரும், நகர கூட்டுறவு சங்க தலைவருமான துரை, வீடு கட்டும் சங்கத் தலைவரும் ஒன்றிய செயலாளருமான வக்கீல் மணிராஜ், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story