ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அரியலூரில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு அரசு கொறடா தனது சொந்த நிதியில் வழங்குகிறார்


ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அரியலூரில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு அரசு கொறடா தனது சொந்த நிதியில் வழங்குகிறார்
x
தினத்தந்தி 24 April 2020 11:03 AM IST (Updated: 24 April 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் பஸ் நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தில் தனது சொந்த நிதியில் இருந்து பொதுமக்களுக்கு விலையில்லா உணவுகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கி தொடங்கி வைத்தார்.

அரியலூர், 

அரியலூர் பஸ் நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தில் தனது சொந்த நிதியில் இருந்து பொதுமக்களுக்கு விலையில்லா உணவுகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கி தொடங்கி வைத்தார். இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், இன்று (அதாவது நேற்று) முதல் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அரியலூர் பஸ் நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் இட்லி ஆகியவை விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றவர்கள் என 196 பேரும், மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் நரிக்குறவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என 210 பேருக்கும், மேலும் மருத்துவமனைக்கு அன்றாட வருகை புரியும் பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்றார். முன்னதாக, அவர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 12 பணியாளர்களுக்கு நகராட்சி மூலம் விலையில்லா சேலைகளை வழங்கினார். மேலும், அரியலூர் மாவட்ட செய்தியாளர்களுக்கு பாதுகாப்பாக செய்திகள் சேகரிக்க முககவசங்கள், கையுறைகள், சோப்பு, கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு பொருட்களையும் வழங்கினார். அப்போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, நகராட்சி ஆணையர் குமரன், தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story