ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 April 2020 11:14 AM IST (Updated: 24 April 2020 11:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சி பணியாளர்கள், ஏழை- எளிய மக்கள் ஆகியோருக்கு ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வந்தது.

ஜெயங்கொண்டம், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சி பணியாளர்கள், ஏழை- எளிய மக்கள் ஆகியோருக்கு ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நகராட்சி கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு பணியாளர்கள் அனைவருக்கும் அம்மா உணவகத்தில் இலவசமாக 2 வேளை உணவு கடந்த 22-ந் தேதி வரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் பணியை ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அம்மா உணவகத்திற்கு வரும் ஏழை- எளிய மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் இன்று (அதாவது நேற்று) முதல் இலவசமாக உணவு வழங்க வேண்டும். வருபவர்களுக்கு இல்லை எனக் கூறாமல் அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். சுகாதாரமாகவும், தரமானதாகவும் உணவு வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் 10 நாட்கள் உணவிற்காக ரூ.50 ஆயிரத்தை நகராட்சி ஆணையர் அறச்செல்வியிடம் வழங்கினார். உடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story