ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல உடல்நலம் பாதித்த மகளை 13 கி.மீ. தோளில் சுமந்த முதியவர் - மும்பையில் உருக்கமான சம்பவம்


ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல உடல்நலம் பாதித்த மகளை 13 கி.மீ. தோளில் சுமந்த முதியவர் - மும்பையில் உருக்கமான சம்பவம்
x
தினத்தந்தி 25 April 2020 4:48 AM IST (Updated: 25 April 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலம் பாதிக்கப்பட்ட 17 வயது மகளை அவரது தந்தையான முதியவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக 13 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற உருக்கமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பை, 

பெண்களை கடவுளுக்கு நிகராக மதிப்பதால் என்னவோ நமது நாட்டில் தாய்க்கு நிகராக தந்தையர்கள் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் குடும்பத்துக்காக தந்தை செய்யும் தியாகங்கள் ஏராளம். இந்தநிலையில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மும்பையில் உருக்கமான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது.

மும்பை கோவண்டி குடிசைப்பகுதியை சேர்ந்தவர் முகமது ரபி (வயது70). சமையல்காரர். கொரோனா பிரச்சினை ஊரடங்கு காரணமாக வேலையிழந்து வருமானம் இன்றி தவித்து வந்தார்.

உடல்நிலை பாதிப்பு

இந்தநிலையில் முகமது ரபியின் 17 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடல் நிலை சரியில்லாமல் தவித்த மகளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அவரிடம் வசதி இல்லை. இதைவிட கொடுமை இலவச சிகிச்சைக்காக பரேலில் உள்ள கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு சென்றுவர போக்குவரத்து செலவுக்கு கூட அவரிடம் சிறிதளவும் பணம் இல்லை.

ஊரடங்கால் பக்கத்து வீட்டுக்காரர்களும் பரிதவித்து வருவதால், அவர்களிடம் கடன் கேட்கவும் முகமது ரபிக்கு மனம் வரவில்லை. எனினும் மகளின் மீது கொண்ட அதீத பாசத்தால் அவரை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என முடிவு செய்தார்.

தோளில் சுமந்து சென்றார்

எனவே அவர், வீட்டில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நடந்தே வந்தார். தனியாக அல்ல, தோளில் மகளுடன். ஆம், உடல்நிலை சரியில்லாத மகளை எப்படி நடக்க வைப்பது என நினைத்து, தோளில் வைத்து சுமந்து ஆஸ்பத்திரிக்கு வந்தார் முகமது ரபி.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகு முகமது ரபி மகளை தோளில் சுமந்தபடி மீண்டும் 13 கி.மீ. நடந்தே வீடு திரும்பினார்.

Next Story